கொவிட் 19 தடுப்பு செயலணி அல்லது சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும்பட்சத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மீள திறக்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 2021ம் ஆண்டு விமாநிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடரும் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், குளிர் காலத்தில் கொவிட் 19 பரவல் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக உலக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளமையினால் விமான நிலையத் திறப்பு மேலும் தாமதமாகவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.