மத்திய கிழக்கில் தற்போது குளிர் காலம் ஆரம்பமாகி விட்டது. இலங்கை இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளின் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு வழங்கும் வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்கள் இந்த குளிர் காலத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்கள் அறையிலேயே சமைப்பவரா? வௌிக்காற்று உள்ளே வராமல் அனைத்து ஜன்னல் கதவுகளையும் மூடிவிடுகிறீர்களா? எச்சரிக்கை… உங்களுக்கு தேவையான ஒக்சிஜன் இன்றி உறக்கத்திலேயே உயிர் போகும் அபாயம் உள்ளது. எனவே வௌிக்காற்று சிறிதாக உள்ளே வர வாய்ப்பளியுங்கள்.
மேலும் தீவிபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கடந்த வருடங்களில் இக்காலத்தில் பல உயிர்கள் அநியாயமாக பறிபோனதை யாரும் மறக்க முடியாது.
அவதானத்துடன் செயற்படுங்கள்! குறிப்பாக அறையில் ஹீட்டர் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருங்கள்!
உங்கள் குடும்பங்களுக்காக இளமையை தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்… உங்கள் உயிர் உங்கள் குடும்பங்களின் உயிர் என்பதை மறவாதீர்கள்!