கட்டார் ரியாலை மாற்றத் தடை விதிக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தடையின் காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் உள்ள வங்கிகள் கட்டார் ரியாலை மாற்ற மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டதையடுத்து மறுப்பு தெரிவித்து மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி வழங்குவதாக காரணம் காட்டி மத்திய கிழக்கு நாடுகள் கட்டார் அரசாங்கத்துடனான உறவை துண்டித்துக்கொண்டதையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கட்டார் ரியால்களை வங்கிகள் இலங்கை ரூபாய்க்கு மாற்றிக்கொடுக்கின்றன என்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே இப்பணி நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கட்டாருக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை கட்டாரில் பணியாற்றும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையரை பாதிக்காது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.