மாலை திருடிய இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறை

பணிபுரியும் வீட்டு எஜமானியின் மாலையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் மீதான விசாரணை நேற்று (18) சார்ஜா நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் உடனடியாக அப்பெண்ணை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருடப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்தவாறு முகப்புத்தகத்தில் தனது புகைப்படத்தை சில வாரங்களுக்க முன்னர் குறித்த பெண் பதிவேற்றம் செய்துள்ளார். இப்புகைப்படத்தை கண்ட எஜமானி தனது மாலையை குறித்த பெண் திருடியுள்ளதார் என சார்ஜா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் திருடவில்லையென்றும் அம்மாலை எஜமானியே தனக்கு பரிசளித்ததாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த மாலை எஜமானியின் வீட்டில் உள்ள குப்பைக்கூடையில் இருந்த கண்டெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் விசாரணைகளின் போது வழங்கிய தகவல்களில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக அப்பெண் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார் என சார்ஜா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435