மாலை மற்றும் இரவு நேரங்களில் கடலில் நீந்தச் செல்வதை தவிர்க்குமாறு டுபாய் மாநகரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலங்களில் கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் கடலில் நீந்துவதை முற்றாக தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், அந்நாட்டு பொலிஸாரும் பொதுமக்களை தௌிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் அபாயகரமான பிரதேசங்களில் சிவப்புக் கொடிகள் இடப்பட்டுள்ளன என்றும் அவ்விடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். மஞ்சள் கொடிகள் நாட்டப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புடன் நீந்தச் செல்லலாம். கற்பாறைகள் உள்ள இடங்கள் மற்றும் பாதுகாப்பு எல்லையைக் கடந்து நீந்த செல்ல வேண்டாம் என்றும் பிள்ளைகளை கடலுக்கு அழைத்துச் சென்றால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்புடன் செயற்படுமாறும் மாநகராட்சிபை எச்சரித்துள்ளது.
வேலைத்தளம்