மூவாயிரம் இலங்கை தாதியருக்கு அமெ. மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு

பயிற்சி பெற்ற இலங்கை தாதியருக்கு அமெரிக்க மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வௌிநாட்டுப்பணிகம் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா, மிச்சிக்கனில் அமைந்துள்ள கர்மா சேர்விஸஸ் என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.

பணியகத்தினால் பணிக்கமர்த்தப்பட்ட தாதியொருவருக்கு அமெரிக்க மருத்துவமனையில் தொழில்வாய்ப்பு கிடைத்ததையடுத்து மேலும் மூவாயிரம் தாதியருக்கு வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.

கண்டி, பொது மருத்துவமனையில் தாதியாக கடமையாற்றிய, இலங்கை மருத்துவப் பேரவையில் தாதியாக பதிவு செய்யப்பட்ட எம்.எம்.ஜி ருவணி ரணசிங்க என்ற தாதியே இவ்வாறு அமெரிக்க மருத்துவமனையில் தொழில்வாய்ப்பு பெற்று செல்கிறார்.

மாதாந்தம் 5000 அமெரிக்க டொலர் சம்பளம் பெறும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளதுடன் அவருடன் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்க மருத்துவமனையில் தாதியாக பணியாற்றும் வாய்ப்பை முதன் முதலாக பெற்ற தாதி இவராவார்.

மேலும் 20 தாதியரை உடனடியாக அமெரிக்க மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான பயிற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435