
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் நிர்மாண பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
180,000 சதுர அடி பரப்பிலான இந்த பயணிகள் முனையத்தில் 2 பயணிகளுக்கான பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.இந்த பயணிகள் முனையம் ஊடாக வருடத்திற்கு மேலதிகமாக 9 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்திற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் 62 பில்லியன் யென் நிதியை முதலீடு செய்வதாக குறிப்பிடப்படுகிறது.