லெபனான் செல்ல எதிர்பார்ப்பவர்கள் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக எந்த நாட்டில் இருந்தும் லெபனான் நாட்டுக்குள் பிரவேசிக்கும் பணியாளர்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அந்நாட்டு பாதுகாப்பு செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக 2020.07.13 ஆம் திகதிக்கு பின்னர் லெபனான் நாட்டுக்குள் வருவோர் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை ஒன்றை வைத்திருக்க வேண்டும். அத்தோடு அவர்கள் லெபனான் அதிகாரியினால் குறிப்பிடப்பட்ட ஹோட்டலில் தங்கியிருக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹோட்டலுக்கான கட்டணம் பணியாளர்களினால் (தொழிலுக்காக செல்வோர்) செலுத்தப்படவேண்டும். இதனால் பி.சி.ஆர் பரிசோதனைக்கான கொடுப்பனவு மற்றும் 24 மணித்தியால காலத்துக்கு ஹோட்டலில் தங்கியிருப்பதற்கு போதுமான தொகை ஆகிய பணம் தொழிலுக்காக செல்வோரிடம் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனை நேர்மறையாக இருக்குமாயின் வைத்திய சிகிச்சை வழங்கப்படுவதுடன் அதற்காக புலம்பெயர் தொழிலாளர்களினால் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435