வதிவிட அனுமதியை மின்னஞ்சலூடாக பெறலாம் – UAE

உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பிரவேசித்து வதிவிட அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை மற்றும் குடியியல் ஆணையம் (The Federal Authority for Identity and Citizenship – ICA) தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் http://ica.gov.ae இணையதளம் அல்லது ஸ்மார்ட் தொலைபேசி செயலியினூடாக விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் முதலில் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். அதனூடாக UAE நுழைவு அனுமதி, விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்தல் மற்றும் நுழைவுக்கான அனுமதியை பெறல் என அனைத்தையும் மின்னஞ்சல் ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும்.

இணையதளம் மூலமாக தகவல்களை வழங்கும் போது சரியான தகவல்களை வழங்குமாறு ஆணையம் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் அடையாள புதுப்பித்தல் மற்றும் மாற்றம் செய்யும் போது அட்டை இலக்கம், காலாவதியான திகதி என்பவற்றை மிகச் சரியாக வழங்குமாறும் ஆணையம் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. டிஜிட்டல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் பணம் செலுத்துவதற்கு முன்பாக மறுபடியும் தகவல்களை மீண்டும் சரிபார்ப்பதனூடாக தேவையில்லா தாமதங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என ஆணையம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

சரியான தகவல்களை வழங்குவதனூடாக குறிப்பிட்ட ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் பணியை பூர்த்திக் கொள்ள முடியும். குறிப்பாக தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி மற்றும் விநியோகிக்கும் முறை போன்ற தரவுகளை டிஜிட்டல் விண்ணப்பத்தில் சரியான முறையில் வழங்கத் தவறவேண்டாம் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435