ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் விமான டிக்கட்டுக்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான டிக்கட்டுக்களின் வரி அதிகரிப்பின் காரணமாக டிக்கட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30 அமெரிக்க டொலராக இருந்த விமான டிக்கட்டுக்களின் விலை 50 அமெரிக்க டொரலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய இவ்வரியதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு 25 அமெரிக்க டொலராக இருந்த விமான டிக்கட் கட்டணமானது 2016ஆம் ஆண்டு வரவு செலவில் 30 அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டது. இம்முறை அத்தொகை மேலும் 50 டொலராக அதிகப்பட்டுள்ளது.
இவ்வரி அதிகரிப்பினால் இதுவரை விமான டிக்கட்டுக்கு செலுத்தப்பட்ட கட்டணத்திற்கு மேலும் 3000 ரூபா அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.