வீசா புதுப்பிக்க காத்திருக்கு கட்டார் வாழ் இலங்கையர்கள் கவனத்திற்கு

கட்டாரில் தற்போது வசிக்கும் வியாபார வேலை வீசா, குடும்ப வருகை வீசா மற்றும் இரத்து செய்யப்பட்ட வதிவிட வீசாவுடன் தங்கியுள்ள இலங்கையர்களின் வீசாக்களை புதுப்பிப்பதற்கு / மாற்றுவதற்கு கட்டாருக்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புபட்ட கட்டார் அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த வீசாக்களை உடையவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட வீசாக்களையுடையவர்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள அல்லது புதுப்பிக்கத் தேவையாக இருப்பின் இன்று (05) இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், கட்டார் அடையாள அட்டை மற்றும் வீசா இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நேற்று கத்தாருக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435