வீட்டுப் பணிச்சார் ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பு மனித வள அமைச்சிடம் கையளிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் இதுவரை உள்ளக விவகார அமைச்சின் பொறுப்பில் இருந்த குறித்த விடயம் மனித வள அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பான அனுமதியை அந்நாட்டு அமைச்சர்கள் கவுன்சில் நேற்று (18) வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய சட்டத்திற்கமைய வீட்டுப் பணிச்சார் ஊழியர்கள் என்கிறபோது அதில் வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சமையற்காரர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சாரதிகள், தோட்டக்காரர்கள், மற்றும் மேய்ப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர். வௌிநாட்டு உத்தியோகத்தர்களை குறித்த பணிகளில் நியமிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பங்களை இதுவரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பிரதேங்களில் உள்ள உள்ளகக மற்றும வௌிநாட்டவர் விவகார அலுவலகங்களே அனுமதி வழங்கி வந்தன.
புதிய அறிவிப்பின் படி மேற்கூறப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அந்நாட்டு மனித வள அமைச்சினூடாகவே இனி விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில் வழங்கல் துறையானது அரசின் கீழ் கொண்டு வருவதனூடாக மிக முக்கியம் என்று அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.