வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் தலைமையில் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த நபரொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருவிட்ட பிரதேச நபரொருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சரின் தலையீட்டுடன் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் அனைத்து சேவைகளுக்குமாக பன்னிரண்டு லட்சம் ரூபா தேவையென்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டரீதியாக செய்வதாக தெரிவித்துள்ள அந்நபர் ஆரம்பப்பணமாக 50,000 ரூபா கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை பெற்ற நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பிரிவிற்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த இராஜதுரை என்ற 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபர் கடந்த 18ஆம் திகதி நுகேகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடம் முறைப்பாடு செய்தவரின் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டது.
விசாரணைப்பிரிவின் முகாமையாளர் சித்தன குணரத்னவின் ஆலோசனைக்கமைய, விசேட பிரிவு பொறுப்பதிகாரி அர்ஜுன் மாஹிகந்தவின் மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் என். யோகேஷ்வரன், எஸ்.எம். முனசிங்க, கித்சிரி அமரநாத் ஆகியோர் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
வேலைத்தளம்