வீட்டுப் பணியாளர் பாதுகாப்பிற்காய் கட்டாரில் புதிய சட்டமூலம்

கட்டார் வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது என்று வெல்கம் கட்டார் இணையதளம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வீட்டுப் பணியாளர்கள் எத்தனை மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டும், வருடத்திற்கு எத்தனை நாட்கள் விடுமுறை, எவ்வாறு சம்பளம் வழங்கப்பட வேண்டும் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாக இச்சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.

தொழில் வழங்குநர் மற்றும் தொழில் பெறுவோர் என இரு தரப்பினரதும் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் கடமைப் பொறுப்புக்கள், சட்டதிட்டங்கள் என்பன இச்சட்ட மூலத்தில் உள்ளக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டாரில் 84,000 வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சுரண்டல்களுக்கும், கட்டாய தொழிலுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படடுள்ளது.

மேலும் எதிர்வரும் 2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக்காக மேற்கொள்ளப்படும் உட்கட்டுமான, நிர்மாணப்பணிகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்குட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இச்சட்ட மூலம் அமையும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வீட்டுப் பணியாளர்களுடைய சம்பள பாதுகாப்பு முறையொன்றை கட்டார் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதனையடுத்து நாட்டில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உரிய நேரத்தில் தமது சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச பிரச்சினைகளுக்கான பிரதித் தலைவர் ஜேம்ஸ் லின்ச் இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தேச சட்டமூலம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தாம் காத்திருப்பதாகவும் வீட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பிற்கான சட்டமூலத்தை தயாரிக்கவுள்ளதாக கட்டார் அரசாங்கம் பல வருடங்கள் உறுதியளித்து வருகிற நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435