வீதிப் போக்குவரத்தை கடுமையாக்கும் ஓமான்

வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக ஓமான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போதுள்ள சட்ட ஒழுங்குகளை முறையாக பின்பற்றாமையினால் வீதி விபத்துக்கள் அதிகமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படுவதுடன் பலர் விசேட தேவையுடையவர்களாக மாறி வரும் அபாயம் தோன்றியுள்ளமையினால் இவ்வாறு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்புதிய சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் அறிவிப்பு வௌியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார் கையை தவிர்த்து வேறு அவயவங்களினால் வாகனத்தை செலுத்துவதற்கும் கவனயீனமாக வாகனம் செலுத்துபவர்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சில இளைஞர் யுவதிகள் காலினால் தமது வாகனத்தை செலுத்தும் வகையில் ஆசனங்களை சரிசெய்துள்ளனர் என்றும் காலினால் ஓட்டும் போது உறங்குவதற்கு ஏதுவாகவே இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள பொலிஸார், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, இணையத்தை பயன்படுத்துவது, கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவது போன்றவை தொடர்பில் பொலிஸார் அதீத கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் கவனயீனமாக வாகனம் செலுத்தியமையினால் 569 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் சிகிச்சை வழங்கிய சந்தர்ப்பங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கவீனமுற்ற அதிக எண்ணிக்கையானோர் தமது நாட்டில் உள்ளனர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435