வீதியில் இறங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்கள்!

தீர்வுக்காணப்படாத நிலையில் உள்ள தமது சம்பள பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர் தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கூறி ஹட்டன், பொகவந்தலாவ, நானூஓயா என பல பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்களை எழுப்பியவாறு வீதிகளை மறித்து, டயர்களை எரித்து இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்படமையினால் நேற்று காலை 9.00 மணி தொடக்கம் சுமார் 11.00 மணிவரை போக்குவரத்து தடை ஏற்பட்டது.

கடந்த 17 மாதங்களாக இழுப்பறி நிலையில் உள்ள தமது சம்பள விவகாரத்திற்கு தீர்வு பெற்றுத் தருமாறு மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பங்களிப்பு வழங்கிய தமது நிலை இம்முறை தீபாவளியைக்கூட கொண்டாட முடியாத வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள இத்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி, பிரதமர் தமது சம்பள பிரச்சினையில் தலையிட்டு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என்றும் அதுவரையில் தாம் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435