வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவருவது மட்டுப்படுத்தப்படுகிறது

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் பணிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனோ வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருவதன் காரணமாகஇ அவர்களுக்கான வைத்தியசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தல் முதலான காரணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதை மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால்,  இந்த மட்டுப்பாடு இடம்பெறுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435