
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 220 இலங்கையர்கள் இன்று (11) நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் இலங்கை திரும்பினர்.
கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் 42 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேநேரம், இன்று மதியம் 12.15 அளவில் மாலைத்தீவில் இருந்து 178 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களை விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.