‘Expat Insider’ நிறுவனம் நடத்திய புதிய ஆய்வுக்கு அமைய, வெளிநாட்டு பணியாளர்கள் வாழ முடியாத மோசமான நாடுகளின் பட்டியலில் குவைட் இணைந்துள்ளது.
வாழ்வியல் சாதகத்தன்மை, இலகுவாக குடியமரும் வாய்ப்பு மற்றும் உளவியல் திருப்தி முதலான விடயங்களை அடிப்படை மூலங்களாகக்கொண்டு இந்;த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படை மூலங்களுக்கு அமைய, குவைட் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய, 2014 முதல் 2016 வரையான காலப்பகுதியில், வெளிநாட்டவர்கள் வாழ முடியாத மோசமான நாடுகளின் பட்டியலில் குவைட் 68ஆவது இடத்தில் இருந்தது.
எனினும், 2017ஆம் ஆண்டில் குவைட் இந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.
இதற்கமைய, தற்போது வெளிநாட்டவர்கள் வாழ முடியாத நாடாக குவைட் தற்போது முன்னிலையில் உள்ளது.