வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு வரிவிதிப்பை அனுமதிக்க முடியாது

வெளிநாடுகளுக்கு தொழில்நாடி செல்வோருக்கு எவ்வித வரியும் விதிக்க அனுமதிக்கப்போவதில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள பெற்றோரின் குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாட்டு தொழில்வாய்ப்பை நாடி செல்வோர் எவருமே அவர்களுடைய குடும்பங்களை விட்டு மகிழ்ச்சியாக செல்வதில்லை. வறுமையும் பொருளாதார கஷ்டமும் குடும்பங்களை விட்டு சம்பாதிப்பதற்கு வெளிநாடு செல்ல தூண்டுகிறது. அங்கு சென்றும் அவர்கள் சுகமான வாழ்வை வாழ்வதில்லை. கடமையாக உழைத்து அனுப்பும் பணத்தில்தான் இங்குள்ள குடும்பங்கள் தலைநிமிர்ந்து வாழ முயற்சிக்கின்றன. அவர்களுக்கு வரி விதிக்க நான் அனுமதிக்க மாட்டேன். வெளிவிவகார அமைச்சு அவர்களுக்கு எதிராக வரிவிதிப்பு மேற்கொண்டால் அதற்கு நானே முதல் எதிரி.

சுமார் 41 வருடங்களாக இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்கின்றனர். கடந்த 8 வருடங்களாக நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை காணப்படுகிறது. அவர்கள் நாட்டுக்கு செய்யும் சேவைக்காக அவர்களுடைய குடும்பங்களான உங்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாகவே சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான உதவிகளை நாம் உங்களுக்கு வழங்குகிறோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435