வெளிநாட்டு பராமரிப்பில்லங்களுக்கு இவ்வருடம் ஒரு பில்லியன் ரூபா செலவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடாத்தப்படும் பராமரிப்பு இல்லங்களுக்காக இவ்வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்காக சென்று உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சின் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜோர்தான், லெபனான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், ஓமான் ஆகிய நாடுகளில் மரணமடைந்த அல்லது வலுவிழந்த 39 குடும்பங்களுக்கு, 72 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும், இந்நிகழ்வின் போது காகோலைகளை வழங்கினார். 5ஆவது முறையாக முன்னெடுக்கும் இந்நட்டஈடு வழங்கும் நிகழ்வுகளினூடாக இவ்வருடம் மட்டும், 196 பேருக்கு 345 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435