வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அனைத்து வகையிலும் விளம்பர பிரசாரங்களை மேற்கொள்ள தங்களது அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது.
எனவே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றுக் கொண்ட விளம்பரங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு பொறுப்பு உடையவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக செயற்பாடுகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.