வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர் குறித்து ஜனாதிபதியின் கவனம்

வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்திலிருந்து வரி அல்லது வேறு கட்டணம்\ அறவிடப்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதாரசபை நேற்றுமுன்தினம் (10) ஜனாதிபதி மாளிகையில் கூடியபோதே அவர் இக்கருத்தினை வௌியிட்டுள்ளார்.

வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்பும் போது எவ்வித வரியோ ஏனைய கட்டணமோ அறிவிடப்படாது முழுமையாக குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த சமரவீர, அர்ஜுன ரணதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கபீர் ஹாசீம் ஆகியோரும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா மற்றும் தேசிய பொருளாதாரசபை அதிகாரிகள் இத்தருணம் பிரசன்னமாயிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435