
வௌிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஊக்குவிப்பதற்கான 5 வருட திட்டத்தை தயாரித்து ஜனாதிபதியிடம் தயாரிக்கப்படவுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை எதிர்வரும் ஆண்டு ஆரம்பப்பகுதியில் மீள கட்டியெழுப்பவுதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கும் நிறுவனமாக பணியகத்தை மாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.