வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலமைப்பரிலுக்கு விண்ணப்பியுங்கள்

பதிவு செய்து வௌிநாடு சென்றுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலை பெற விண்ணப்பிப்பதற்கான காலம் இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நலன்புரி நிதியத்திலிருந்து வருடாந்தம் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு சென்று பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியாக ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டத்தின் காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் போனவர்களைக் கவனத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், 2018ம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சை சித்தியடைந்தவர்கள் , க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றவர்கள் ஆகியோருக்கு முறையே ரூபா 20,000.00, 25,000.00, 30,000.00 இப்புலமைப்பரிசில் ஊடாக வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை www.slbfe,lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

1996ம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினூடாக இதுவரை 44,832 மாணவர்களுக்கு 8974 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435