இன்றும் (08) ஆம் நாளையும் (09) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள துணை தூதரக சேவைகள் இவ்விரு தினங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் வசிப்போருடைய மரணங்கள் தொடர்பான விபரங்களை பெறுதல், ஆவணங்களை பெறல் மற்றும் ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில் மட்டும் சேவைகள் வழங்கப்படும். அச்சேவைகள் பெறுவோர் முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வருகைத்தர வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பான ஆவணங்களுக்கு +94 (011) 233 8836/ +94 (011) 233 5942 என்ற இலக்கங்களினூடாகவும்
ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில் +94 (011)2338812 இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.