
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வௌ்ளை ஆயுதங்களை (கத்திகள், வாட்கள், பொல்லுகள்) கையில் கொண்டு சென்று பொலிஸாரிடம் சிக்கினால் மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது 50,000 முதல் 30,000 திர்ஹம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பான அறிவித்தல்கள் வீடியோ வடிவத்தில் ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக (Facebook) பக்கத்தில் வௌியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக விளையாட்டு பிரியர்களே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வௌ்ளை ஆயுதங்களுடன் விளையாட்டரங்கிற்குள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்றுமுன்தினம் (06) தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதி வரை Fifa காற்பந்தாட்டப்போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது