ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்கைப் இணையதளம் தடை செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன் தொடர்பு கொள்வதில் பல்வேறு சிரமங்களை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர்.
தொலைதொடர்பு ஒழுங்குமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதனால் ஸ்கைப் அந்நாட்டில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய அரபு இராச்சிய தொலைதொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பேஸ்டைம், வைபர், வட்ஸ்அப் போன்ற சேவைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது ஐக்கிய அரபு இராச்சிய புலம்பெயர் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மேற்கொள்ளப்படும் இணையதள குரல் தொடர்பாடல்கள் தொடர்பில் மிக கடுமையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பிரதான தொலைதொடர்பு சேவைகளான டு மற்றும் எடிசலாட் ஊடான தொடர்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இணைய நெறிமுறை குரல் பரிமாற்றத்தினூடாக உள்நாட்டில் உள்ள அன்பானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எடிசலாட் அல்லது டு சேவையை பயன்படுத்துபவர்கள் போடிம் (BOTIM)அல்லது (C’Me)தொடர்புகொண்டு சேவையை பெற்றுக்கொள்ளலாம். எனினும் அச்சேவைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வௌியே தொடர்பு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
S