106 வது சர்வதேச தொழிலாளர் சமவாயம் ஜெனீவாவில் ஆரம்பம்

சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் 106 வது சர்வதேச தொழிலாளர் சமவாயம் (The 106th International Labour Conference) இன்று (05) ஜெனீவாவில் ஆரம்பமானது.

“வேலைக்கான ஓர் உலகத்தை வடிவமைத்தல்” என்ற கருப்பொருளில் ஆரம்பமான சமவாயத்தில் முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியும், சமாதானம் மற்றும் மீட்டெழுதல் நோக்கிய வேலை வாய்ப்புக்கள் மற்றும் கௌரவத் தொழில் (Decent Work ) அடிப்படைகள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளன.

இச்சமவாயம்

அகதி அந்தஸ்து கோரி இடம்பெயர்வோர் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு, ஒழுங்கான மற்றும் முறையான புலம்பெயர்வு போன்றவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச உடன்படிக்கை அடிப்படையாக கொண்டு நியாமான முறையில் ஆட்சேர்ப்பு (Fair recruitment in order to contribute to the UN global compacts on refugees and safe, orderly and regular migration) போன்ற விடயம் மிக முக்கியதொன்றாக கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தினால் 2008ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நியாமான உலகமயமாக்கலுக்கான சமூக நீதி பிரகடனத்தின் தொடர் கலந்துரையாடல் மற்றும் இலக்கம் 4, 15, 28, 41, 60 மற்றும் 67 போன்ற சமவாயங்களை நீக்குவதல் போன்ற முக்கிய தலைப்புக்களில் கலந்துரையாட உள்ளதால் தொழிலாளர் பிரதிநிதிகள் , தொழில்வழங்குனர் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் உட்பட கிட்டத்தட்ட 4,000 பேர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கஉய் ரைதர் (Guy Ryder ) அவர்களால் கடந்த வருடம் ஜூலை மாதம் முடிவடைந்த சமவாய முடிவுரையில் , உலகத்தில் மொத்த தொழிலாளர் வகுப்பினரில் மூன்றில் இரண்டு பங்கினர் முறைசாரா மற்றும் தொழில் சட்டத்துக்கு உட்படுத்தப்படாமல் காணப்படுகின்றனர். இவ் நிலைமை காரணமாக சுரண்டல்கள் உரிமை மீறல்கள் பாரிய அளவில் தொடருமாயின் எஞ்சியுள்ள அனைத்து தொழில் வர்க்கத்துக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறும் என்பதில் எவ்வித ஐயமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

கௌரவத் தொழில் (Decent Work ) என்பது நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் (தனியார் மற்றும் அரசாங்கம்) உற்பத்தித் திறன் மற்றும் அர்த்தமிக்க தொழில் வாய்ப்பு , வேலைத்தளத்தில் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தல் , சமூக பாதுகாப்பு மற்றும் சமூக கலந்துரையாடல் போன்ற அம்சங்களை உள்ளடைக்கியதே ஆகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435