அரச ஊழியர்களுக்கான சொத்துக்கடன்

அரசாங்கம் வழங்கும் இந்த இலகு  சொத்துகடனை பெறுவதற்கு அரச ஊழியர்கள் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. என்ன காரணம் என்றால் அவர்களின் முயற்சி இன்மை தான் காரணம். பல அக்கறை உள்ள அரச ஊழியர்கள் இவற்றை பெற்று பயன் பெறுகிறார்கள்.

இந்த கடனின் நிபந்தனைகள்

  • Confirmation முடித்த அரச ஊழியர் ஒருவர் இதை பெற்றுகொள்ள தகுதியுள்ளவர்.
  • அத்துடன் அரச திணைக்களமாக ஆக இருப்பதுடன் ஓய்வூதியம் கிடைக்கும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும்.
  •  EPF ஊழியர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது.
  • என்ன தேவைக்காக இந்த கடனை பெறமுடியும்?
  • @ வீடு ஒன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கு
    @ வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு
    @ காணி ஒன்றை வாங்குவதற்கு ( 4 பரப்புக்குள்)
    @ வீடு ஒன்றை renovation செய்ய
    @ ஏற்கனவே காணப்படும் வீட்டு கடன் ஒன்றை அரச சொத்து கடனாக மாற்ற முடியும்.
    @ உறுதியுடன் காணப்படும் Apartment யும் வாங்க முடியும்
    கடனின் அளவை தீர்மானிக்கும் காரணிகள்.
    #ஊழியர் ஒருவரின் மாத அடிப்படை சம்பளத்தின் 84 மடங்கு அ்அல்லது அதிக பட்ச தொகை 30 இலட்சம் ஆகும்.
    # ஊழியரின் வயது மற்றும் மாதாந்த வேதனம்.
    # கடன் திட்டத்தின் அளவு. ( வீடுகட்டவோ அ்அல்லது காணி வாங்கவோ ஏற்படும் செலவு)
    # 60 வயது வரை அல்லது 25/30 வருட நீண்டகால கடனாக வங்கியில் பெறமுடியும்.
    # கணவன் மனைவி இருவரும் அரச ஊழியர்கள் என்றால் இருவரும் பெறமுடியும் இக்கடனை 60 இலட்சம் வரை.
    Eg -வைத்தியர், பொறியியளாளர் ,Ds office ,teachers, மாகணத்திணைக்களங்கள்,
    தேவைப்படும் Documents
    & காணியின் தெளிவான அறுதி உறுதி. (Clear deed)
    & surveyor plan
    & 30 வருடத்திற்கு மேற்பட்ட தோம்பு
    & எல்லைகோட்டு சான்றிதழ்
    & உடமை சான்றிதழ்
    & வதிவிட சான்றிதழ்
    & அங்கிகாரிக்கப்பட்ட House plan
    & Survey plan
    வட்டி விகிதம்
    முதல் 500000 இற்கு 4%
    அடுத்த 500000 இற்கு 7%
    அடுத்த 2000000 வரை 9%
    இந்த கடன் திட்டத்தை பல அரச ஊழியர்கள் பயன்படுத்துவதில்லை என்பதே கவலைக்குரிய விடயம். Documents எடுக்க அலைய முடியாது என்பது அவர்கள் சொல்லும் பிரதான காரணம்.
    ஆனால் இதில் உள்ள documents எல்லாமே கடன் எடுக்க மட்டும் தேவைப்படுவதில்லை. கடன் எடுக்க விட்டாலும் இந்த documents நீங்கள் எடுக்க வேண்டியது அல்லது வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது தான் உண்மை.

நன்றி- இலங்கை தமிழ் ஆசிரியர்கள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435