3000 வெளிநாட்டவர்களை பணியிலிருந்து நீக்கியது குவைட்

குவைட் அரச துறைகளில் சேவையாற்றும் சுமார் 3000 வெளிநாட்டவர்களை சேவையிலிருந்து நீக்க குவைட் அரசாங்கம் கடந்த வாரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குவைட் பிரஜைகளுக்கு அரச துறைகளில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய, அரச துறைகளில் சேவையாற்றும் குவைட் பிரஜைகள் அல்லாத 3 ஆயிரத்து 140 பேரின் சேவை உடன்படிக்கையை இரத்துச் செய்ய குவைட் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானம் எதிர்காலத்திற்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குவைட் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் சேவையாற்றும் குவைட் பிரஜைகள் அல்லாத 44, 575 பேரளவில் சேவையிலிருந்து நீக்க குவைட் எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீர்மானத்தின் காரணமாக குவைட் தொழில் சந்தையில் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படும் என பெரும்பாலானோர் தெரிவிக்ககின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435