வருகை வீஸாவுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த குவைத் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய இதுவரை 150 குவைத் தினாராகவிருந்த வருகை வீஸாவுக்கான அடிப்படை சம்பளம் 200 தினாராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொகை குவைத்தில் பணியாற்றும் நபர்களின் மனைவி பிள்ளைகளை வருகை வீஸாவில் அழைப்பிப்பதற்காகும். எனினும் தனது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினருக்கான வருகை வீஸாவிற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை சம்பளம் 300 தினாராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகை வீஸா அனுமதி வழங்குவதில்லை என்று புதிய சட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நோக்கம் குறித்து ஆராய்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தை தன்னுடன் தங்கவைப்பதற்கான தங்கி வாழ்தல் வீஸாவுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை சம்பளத்தை 250 தினாரில் இருந்து 450 ரூபாவாக குவைத் அரசு கடந்த வாரம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களில் குவைத்தில் வௌிநாட்டில் தங்கி வாழ்வோரின் தொகை கணிசமாக அதிகரித்துள்ளமையையினால் அந்நாட்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீஸாவுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க குவைத் தீர்மானம்
வேலைத்தளம்