கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் நிலைக்கு மத்தியில், மத்திய கிழக்கில் இருந்து மட்டும் 17,861 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 40,000 இலங்கையர்களை இதுவரை இலங்கை திருப்பி அழைத்து வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2020 நவம்பர் 11ஆந் திகதி நடைபெற்ற இலங்கையிலான இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியபோது அவiர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த இரண்டு தசாப்தங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு சுமார் 200,000 பேர் வெளியேறும் விகிதத்துடன் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் பணி புரிவதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வெளிநாடுகளிலுள்ள இலங்கைகளில் சுமார் 800,000 பேர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணி புரிகின்றார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் நோக்கானது புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட அனைத்து இலங்கையர்களினதும் வாழ்வாதாரத்தையும் நலனையும் உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. கோவிட் தொற்றுநோய் தொடங்கியவுடன்இ இலங்கையின் புலம்பெயர்ந்த மக்களின் நலத் தேவைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்டுத்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து மட்டும் 17,861 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 40,000 இலங்கையர்களை இதுவரை இலங்கை திருப்பி அழைத்து வந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலையின் போது, இந்த தொழிலாளர்களின் உடனடித் தேவைகள் குறித்த அனுபவ ரீதியான தரவுகளை சேகரிப்பதற்கும்இ வழிகாட்டுவதற்கும், தகவல்களை வழங்குவதற்கும், அவசரநிலைகளின் போது உதவுவதற்குமாக ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்புத் தரவுத்தளம் நிறுவப்பட்டது. மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு, மலேசியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த தரவுத்தளத்தில் தற்போது 98,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு வானில் தூக்கி உயர்த்தும் அடிப்படையில் உலர் உணவுகளை வழங்குவதற்கும், தற்காலிகத் தரிப்பிடம் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்கும், ஆர்.டி. – பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், ஜோர்தான் மற்றும் கட்டார் போன்ற நாடுகளில் கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக தொழில்களை இழந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அல்லது மாற்றுத் தொழில் வாய்ப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தும் வகையில் எமது சில தூதரகங்கள் செயற்படுத்துவதற்கும் தேவையான அவசர நிதியை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இந்த சவாலான காலங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கு ஏற்கனவே சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அனைத்து நாடுகளுக்கும் எமது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.