பஹ்ரேயினில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளருக்கான வைத்திய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதிப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய சுகாதார சட்டதிட்டங்களுக்கமைய இதுவரை 3 பஹ்ரேய்ன் டினாராக இருந்த வைத்தியக்கட்டணம் ( 8 அமெ. டொலர்) தற்போது 7 பஹ்ரேயின் டினாராக (19 அமெ. டொலர்) உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அரச மருந்தகங்களில் மருந்துகளை வாங்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் தனியார் மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.