இலங்கையின் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களில் தொழில் விஸா இல்லாமல் பணியாற்றுபவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், வெளிநாட்டு பணியாளர்களின் வருகை குறித்து ஆராய குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைத்துள்ளார்.
வெளிநாட்டு பணியாளர்களில், இந்திய, பங்களாதேஷ; மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
முதலீட்டு சபை ஊடாக வெளிநாட்டுவர்களுக்கு அதிகமான தொழில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபை கடந்த ஆண்டு 8 ஆயிரம் தொழில் விஸாவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றுள் 5 ஆயிரத்து 786 விஸாவுக்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுற்றுலா விஸாவில் வந்த சிலர் இங்கு பணியாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – சண்டே டைம்ஸ்