வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் பணியாளர்களை அனுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் கொரியா குடியரசுக்கும் இடையில் இரு வருட காலத்துக்காக 2015ம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
குறித்த முறையினை பயனுள்ளவகையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் நீடிப்பு செய்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.