இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேஷியா செல்லும் பணியாளர்கள் தீவிரமான மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர் என மலேஷிய பிரதிப் பிரதமர் அஹமட் ஷைட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இச்சட்டமானது மலேஷியாவில் பணியாற்றும் வௌிநாட்டவர்களின் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பணியாளர் ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாகவும், மலேஷியா சென்று ஒரு மாதத்தின் பின்னரும், ஒப்பந்த காலத்தின் ஒவ்வொரு வருட இறுதியிலும் இந்த மருத்துவ சோதனைகள் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.