சட்டவிரோதமான முறையில் தென் கொரியாவில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
01.10.2018 முதல் 31.03.2019 வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.
கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி, அங்கிருந்து தமது சொந்த நாடுகளுக்கு திரும்பினால், சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதால் விதிக்கப்படும் மீள்திரும்பல் தடையை முழுமையாக நீக்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கொரியாவில் தங்கியிருந்ததால், அந்நாட்டு அதிகாரிகளினால்; கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டால், 10 வருடங்களுக்கு கொரியாவுக்கு மீள்திரும்ப தடை விதிக்கப்படும்.
வேலைத்தளம்