
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடுதிரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு மீள அழைத்துவரப்பட்டனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் சிறப்பு விமானத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்று, பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.