வெளிநாட்டு தொழிலாளர்களின் விசாவும், தொழில் ஒப்பந்தமும் இரத்தாகி இருக்குமானால், அவற்றை புதுப்பிப்பதறகான நடவடிக்கைகளை எதிரகாலத்தில் முன்னெடுக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் வாரநாட்களில் அலுவலக நேரங்களில் தங்களது அலுவலகத்திற்கு வருகை தந்து ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவ பிரிவின் அதிகாரியை தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த வானொலி ஒனறில் இடம்பெற்ற செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் 24 மணி நேரமும் இயங்கும் தங்களது அலுவலகத்தின் 1989 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தஙகளது கேள்விகளை முன்வைத்து, தொலபேசி இலக்கங்களை குறிப்பிட்டால், திங்கட்கிழமை அவர்களுக்கான பதிலளிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.