மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு நேற்று (19) இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியானது
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 9 பேருக்கு இறுதியாக தொற்று உறுதியானது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கொவிட் 19 தொற்று உறுதியானது.
இதேநேரம், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்று உதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதற்கமைய, நாட்டில் 20 பேருக்கு நேற்று கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.
678 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு 10.20 மணிக்கு வெளியிட்ட கொரோனா நிலவர அறிக்கை கீழே