ஜோர்தானில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டிலுள்ள மெலிபன் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய குறித்த நபர் லெஸ்லி என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்தானில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவராவார்.
எனவே, நீங்களும் ஜோர்தானில் பணியாற்றுபவர்களின் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். இயன்றளவு பாதுகாப்பு நடைமுறைகளை கையாள வேண்டும்.