அபுதாபி சர்வதேச விமானநிலையம், அல் பாடீன் விமான நிலையம் மற்றும் அல் மக்டோம் விமானநிலையம் என்பன அமைந்துள்ள பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதனால் தூசு வீதிகளை மறைத்துள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தென் கிழக்காக காற்று வேகமாக வீசுவதனால் மூவாயிரம் மீற்றருக்கும் குறைவாக தௌிவாக பார்க்கக்கூடியதாக உள்ளதாகவும் கரையோர மற்றும் உள்ளக பிரதேசங்களில் இந்நிலை இன்று மாலை 4.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பிரசேதங்களில் மேக மூட்டமாக காணப்படுவதுடன் இந்நிலை காலை நேரம் சிறிதாக காணப்பட்டு மாலை நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் ஓமான் கடற்பகுதியில் அலைகளின் வேகம் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.