UAEயில் கடும் மழை… அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

கடும் மழை காரணமாக டுபாய், அல் அயின், புஜைரா உட்பட பல பிரதேசங்களில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று ஐக்கிய அரபு இராச்சிய வானிிலை அவதானநிலையம் பொது மக்களை எச்சரித்துள்ளது.

இந்நிலை (17) வரை தொடரும் என்றும் காலநிலையில் நிலையான தன்மை காணப்படாத காரணத்தினால் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நாட்டின் பல பாகங்களில் மந்தார நிலை காணப்படுவதாகவும் கடுமையான காற்று வீசும் நிலை காணப்படுவதாக மணற்புயல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் ஓமான் கடல் என்பவற்றில் அலைகள் மிக வேகமாக இருக்கும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435