நாடு முழுவதும் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதாகவும் கரையோர பிரதேசங்களில் கடுமையான காற்று வீசுவதாகவும் ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
ஆகக்குறைந்த வெப்பநிலையாக 5.6 செல்ஸியஸ் தம்தா பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் அரபிக் கடல் அலைகள் மிக கடுமையாக காணப்படும் என்றும் நாளை காலை (03) வரை அலையின் உயரம் சுமார் 6-8 அடிகள் வரை காணப்படும் என்பதால் வார இறுதியில் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகமென்பதால் தூசு அதிகமாக காணப்படும் என்றும் எனவே வௌியில் செல்லும் பொது மக்கள் பாதுகாப்பாக செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.