UAEயில் சிகிச்சைகளுக்கு வரிவிலக்கு

அடுத்த வருடம் (2018) ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிப்பில் சுகாதார துறையில் சில பிரிவுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தடுப்பூசி வழங்கல், சிகிச்சைகள் (பற்சுகாதாரம் உட்பட) என்பவற்றுக்கு 5 வீத வரி விதிக்கப்படாது என்றும் ஆனால் ஒப்பனை சிகிச்சைகளுக்கு 5 வீத வரி விதிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மத்திய வரி ஆணையம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை மற்றும் நோய் தடுப்புச் சாராத அனைத்து சுகாதார சேவைகளுக்கும் 5 வீத வரி அறிவிடப்படும். எனினும் மருந்து, மருத்துவக் கருவிகள் என்பனவற்றின் கொள்வனவிற்கும் 5 வீத வரி விதிக்கப்படாது

மருத்துவமனை, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு வரி விலக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு தேசிய மருத்துவமனையின் பிரதான கணக்காளர் ஶ்ரீனிவாஸ் ஆகார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435