UAEயில் திடீர் காலநிலை மாற்றம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பகுதகளில் கடுமையாக மழை பெய்யும் என்றும் இடி புயலுடன் வானம் மேகம் சூழப்பட்டதாக காணப்படும் என்றும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இந்நிலை தொடரும் அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

புஜைரா பிரதேசத்தின் அல் தவீன், முர்பே, கடபா ஆகிய பகுதிகளிலும் ர்ச அல் கைமாஹ் பிரதேசத்தில் ஹட்டா, அஜ்மான், உம் அல் குவைன், அல் ஜைரா அல் ஹம்ரா மற்றும் அல் கைல் ஆகிய பகுதிகளிலும் மழை வீழ்ச்சி காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் வௌ்ள அபாயம் காணப்படுவதாகவும் திடீரென ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமானது வார இறுதி நாள் திட்டங்களை முற்றாக ஸ்தம்பிதமடைய செய்துள்ளது என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நேற்று (17) தொடக்கம் நாளை (19) வரை நாட்டின் பல பாகங்களில் மழை மேகம் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படும் என்று தேசிய காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435