UAEயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 48 மணி நேரத்தில் நாட்டுக்கு

கொவிட் 19 காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 150 இலங்கையர்களே இவ்வாறு உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்களை அழைத்து வருவதற்கான இரு சிறப்பு விமானங்கள் சவுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

முப்படையினர் நடத்தி வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களை தங்க வைப்பதற்கு அவசியமான இடவசதிகள் கிடைக்கும் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற கொவிட் 19 தடுப்பு பணிக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435