UAEயில் பணியாற்றும் ஆண்களுக்கும் மகப்பேற்று விடுமுறை

மனைவியின் பிரசவத்தின் ​போது புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தனியார்துறையில் பணியாற்றும் கணவன்மாருக்கும் சம்பளத்துடன் கூடிய 5 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் ஷயேட் அல் நயான் தந்தைமாருக்கு மகப்பேற்று விடுமுறை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இவ்வறிப்பு நேற்று (30) வௌியானது. இதன் மூலம் தந்தைக்கு மகப்பேற்று விடுமுறையை வழங்கிய முதலாவது மத்திய கிழக்கு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகப்பேற்று விடுமுறை குறித்த விபரங்கள் வருமாறு…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனியார்துறையில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் தமக்கு உரித்தான சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறையை 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.

அரசதுறையில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கு ஏற்கனவே 3 நாட்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படடுள்ளது. எனவே உடனடியாக அவர்களின் விடுமுறை நாட்களில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

தனியார்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 45 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படுகிறது. 45 விடுமுறை நாட்கள் பூர்த்தியான பின்னர் இரு தடவைகள் 30 நிமிட மேலதிக நேரம் குழந்தை பராமரிப்பிற்காக வழங்கப்படுகிறது. 18 மாதங்களுக்கு இந்த மேலதிக பராமரிப்பு நேரம் புதிய தாய்மாருக்கு உரித்தாகிறது.

அரச துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 90 நாட்களில் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சிய உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடுமுறைக்காலம் பூர்த்தியடைந்த பின்னர் இரு மணித்தியால மேலதிக நேரம் குழந்தை பராமரிப்புக்காக வழங்கப்படுகிறது. அபுதாபி அரசாங்க ஊழியர்களுக்கும் இச்சலுகை உரித்துடையதாகிறது.

டுபாய் மற்றும் சார்ஜா அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 90 நாட்களின் பின்னர் மேலதிகமாக சம்பளமில்லாமல் 30 நாட்கள் விடுமுறை வழங்கும் சலுகை உள்ளமை குறிப்பிடத்தக்கது..

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435