சார்ஜாவில் அரச பணியில் உள்ள பட்டதாரிகளுக்கு 17,500 திர்ஹமில் இருந்து 18,500 திர்ஹமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவை ஆளும் கலாநிதி ஷீக் சுல்தான் பின் மொஹம்மட் அல் குவாஷினியின் உத்தரவுக்கமைய அரச பணியாற்றும் 600 மில்லியன் திர்ஹம் சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் புதிய சம்பள முறை நடைமுறைப்படுத்தப்படும்.
இச்சம்பளமானது அந்நாட்டில் எட்டாந்தரம் வரையும் கற்ற குடிமகனுக்கே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இளம் பட்டதாரிகளின் ஆரம்ப சம்பளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜாவில் பணியாற்றும் அந்நாட்டு குடிமகனுடைய மாதாந்த அடிப்படை சம்பளம் 18,500 திர்ஹம் ஆகும். இதேவேளை, எட்டாந்தரத்தை விட குறைந்த தரம் கற்றவர்களுக்கான சம்பள அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த தரத்திற்கு வர ஆறு ஆண்டு அனுபவம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.